முஸ்லிம்களின் கல்வி நிலமை
இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவராகளான நாம் கல்வி,பொருளாதாரம் ஆகியவற்றில் பெரிதும் பின்தங்கியுள்ளோம்.இக்கட்டுரையில் கல்வியின் தாக்கம் பற்றி நான் கலந்துரையாடுகிறேன்.நான் இதை எழுதுவதற்கு எத்தனையோ காரணங்கள்.
என் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள்.அதனால் எனக்கு பாடசாலை கல்வி,நிர்வாகம் பற்றி அதிக விடயங்கள் தெரியும்.
தலை நகரில் அதிகமான முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன.என்றாலும் மாண்வர் எண்ணிக்கை மிக அதிகம்.அத்தோடு சில பெற்றோர்கள் தம் பிள்ளைகலை முஸ்லிம்,சிறு பாடசாலைகலில் சேர்க அதிகம் ஆர்வம்
தயக்கம் காட்டுகின்றனர்.ஏன் என ஆராயுமிடத்து,அதற்கான காரணங்கள்.
கல்வி சரியில்லை,Results சரியில்லை என்பவையே.சின்ன பாடசாலைகளில் கல்வி கற்பிப்பவர்களும் ஆசிரியர்களே.
பொதுவாக அத்தகைய பாடசலைகளில் O/L ,A/L பெறுபேறுகளை நோக்குமிடத்து ...ஆம் பெற்றோர்களின் ஆதங்கம் சரியே.கடைசியாக நடந்த ஒ/ல் பரீட்சை பெறுபேறுகள் படு கேவலமாக உள்ளது.கணித பாடம் சித்தியெய்தியவர்கள்களை விரல் விட்டு எண்ணலாம்.
கணித பாடத்தில் சித்தியெய்தாமையால் A/L இற்கு தகுதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.ஒ/ல் தகுதியுடனேயே வேலைக்கு செல்கின்றனர்.என்றாலும் இன்றைய காலகட்டத்தில் அதிகமான(எல்லா) நிறுவனங்களும் A/L தான் குறைந்தபட்ச தகுதியாக குறிப்பிடுகின்றனர்.இதனால் பெறும்பாலனோருக்கு சிறந்த வேலைகள் கிடைப்பதில்லை.இன்று வீதியில் இறங்கி பாருங்கள் அதிகமாக ஆட்டோ ஒட்டிவது,நடைபாதைகளில் வியாபாரம் செய்வது முஸ்லிம்களே.இதற்கு காரணம் ஒட்டுமொத்தமாக கல்வியறிவின்மையே.
பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலேயே நல்ல் கல்வியை புகுட்ட வேண்டும்.நல்ல ஆசிரியர்கள் உருவாக வேண்டும்.
கொழும்பு நகரை எடுத்துக்கொள்ளுங்கள்,பொதுவாக எவ்வளவுதான் கஷ்டமாக இருந்தாலும் எல்லாருடைய வீடுகளிலும் T.V உள்ளது.அதிலும் Cable Channels இருக்கும்.காலையில் போட்ட T.Vஇரவு தான் அனைக்கப்படும்.வீட்டில் உள்ள் பெரியவர்கள் சிறியவர்கள் எல்லாரும் ஒன்றாக இருந்து பார்து ரசிப்பார்கள்.
காத்திருங்க்கள் விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய ஒரு பதிவு சீக்கிரமாகமாக உங்கள் கைகளுக்கு வரும்.
T.V இற்கு ஒரு இடைவேளை கொடுப்பார்கள் எப்போது தெரியுமா?.......செய்திகள் போகும் நேரத்தில்.(இதனால் சரியாக நாட்டு நிலவரங்கள் தெரியாது.நாட்டிற்கு கேடு விளைவிப்பவர்கலுக்கே மறுபடியும் வாக்கு போடுறது.விளைவாக வாழ கஷ்டப்படுறது, நமக்கு இயல்பானது தானே)
அத்தோடு இன்னும் சில சுவாரசியமான விஷயங்கள் நடைபெறும் அதான் சொல்லும்போது
ஆமாம்...பெண்கள் தங்கள் முந்தானையை தலையில் போடுறது இந்நேரத்தில் தான்.அத்துடன் அதானிற்கு மரியாதை செலுத்தும் முகமாக சத்தத்தை குறைத்து வைத்துக்கொண்டு பார்பார்கள்(என்னா மரியாதை???)
சரி தலைப்பை வைத்துவிட்டு எங்கேங்கோ சென்றுவிட்டேன்.
சரி இப்படி எல்லாரும் T.V பார்துக்கொண்டு இருந்தால் பிள்ளைகள் எப்படி படிப்பது(பொதுவாக கொழும்பில் உள்ள வீடுகள் சிறியவை,அறை வசதிகள் குறைவாகவே இருக்கும்).பரீட்சைக்கு முதல் நாள் தான் படிப்பது).இதற்கு அவர்கள் பெற்றோர்களே பொறுப்பு கூற வேண்டும்.
இன்னொரு முக்கியமான விடயம் பிள்ளைகள் படிப்பதற்கு சக்தி வேண்டும்.சரியான நேரத்திற்கு உணவு எடுப்பதில்லை ,விஷேசமாக காலை உண்வு,வீடுகளில் சமைப்பதில்லை(வேலைக்கு போகும் பெண்கள் உள்ள வீடுகளில் சமைப்பார்கள்).பிள்ளைகளுக்கு பணம் கொடுத்து ,பாடசலை சிற்றுண்டிச்சாலையில் சாப்பிடச்சொல்றது.இதனால்
இதனால் அவ்ர்களுக்கு கிடைக்கவேண்டிய சரியான சக்தி கிடைப்பதில்லை ,பழைய உணவுகளை உண்பதால் கடுமையான நோய்கள் வருகின்றன.
பெற்றோர்கள் தன் பிள்ளைகள் படிக்கிறார்களா என பார்பதில்லை.பாட புத்தகங்கள்,குறிப்பு புத்தகங்கள் போன்றவற்றை அவதானிப்பதில்லை.கடைசி நேரத்தில் பரீட்சை முடிந்த பிறகு மாணவர் முன்னேற்ற அறிக்கையை பார்த்து புள்ளிகள் குறைந்தால் அடிக்கிறது ,ஏசுரது.இதனால் என்ன பயன்??
ஆசிரியர் பெற்றோர் சந்திப்புகளுக்கு ஒழுங்காக வருவதில்லை .இதனால் தம் பிள்ளைகள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என தெரியாது....
பெற்றோர்கள் வேற தேவைகலுக்கு அதிகம் செலவலிப்பார்கள்.ஆனால் பாடசலை,கல்வி நடவடிக்கைகளுக்கு அதிகம் செலவலிக விரும்பமாட்டார்கள்(இல்லை)
மிக இள வயதிலேயே செல்போங்களை வாங்க்கி கொடுக்கறது.அதுவும் விலையுயர்ந்தவை.இதனால் பிள்ளைகள் வேறு பாதைக்கு செல்கின்றார்கள் என யோசிப்பதில்லை.தேவையில்லாத பழக்கங்கள் உருவாகின்றன.அடிக்கடி ரீசார்ஜ் செய்ய பணம் தேவைப்படும்.இதனால் சொந்த வீட்டிலேயே திருடுறது........இத்தகைய செயல்கள் அந்த் பிள்லைகளின் எதிர்காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இன்னொரு முக்கியமான விடயம் அதிகமான வகுப்புக்கள்.எல்லா பாடத்திற்கும் வகுப்புகளுக்கு செல்வது,ஒரு பாடத்திற்கே இரண்டு ,மூணு வகுப்புகளுக்கு செல்வது,இதனால் மாணவர்கள் சுயமாக படிக்க நேரம் கிடைப்பதில்லை.ஆசிரியர் சொல்வதை அப்படியே புத்தகங்களில் பிரதி பண்ணுகிறார்கள்.
ஆசிரியர்கள்...
எல்லா மாணவர்களும் வகுப்புகளுக்கு செல்கின்றார்கள்.இதனால் பாடத்திட்டத்தை முடிக்க அதிக சிரத்தை எடுப்பதில்லை,பாடங்கலை மேலோட்டமாகவே கற்பிக்கின்றனர்.
இன்னும் எத்தனையோ விடயங்கள் உள்ளன.இருந்தாலும் புனிதமான ஆசிரியர் தொழிலை குறை கூற மனமில்லை.
மாணவர்கள்........
எமது நாடு 80% கல்வியறிவை கொண்ட நாடு,இலவசக் கல்வியே இதற்கு காரணம்.எனினும் முஸ்லிம்களாகிய எம்மவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.எத்தனையோ பாடாசாலைக்கு செல்ல் வேண்டிய மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனர்.அதிக பொருளாதார
நெருக்கடி விளைவாக சிறு வயதிலேயே தொழிலுக்கு செல்ல வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.
என்றாலும் முஸ்லிம்கலாகிய நாங்கள் கல்வியில் அதிக பின்னிலையில் இருக்கிறோம்.நாம் முன்னுக்கு வர வேண்டும்.இதற்காக மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவரும் பாடு பட வேண்டும்.முஸ்லிம் பாடசலைகளுக்கு கல்வி வசதிகள் கிடைக்க வேண்டும்.
தயவு செய்தி இச்செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவோம்
நன்றி