Showing posts with label Quatos. Show all posts
Showing posts with label Quatos. Show all posts

Tuesday, May 11

பெண்கள் மேல் ஒரு LOOK


பெண்ணை பெற்று ஒருவீட்டிற்கு அனுப்பும் வரை அவளை பெற்றோர் படும் கஷ்டம் கொஞ்சம்  அல்ல.

Teen Age  பருவத்தில் எல்லாரும் ஒரு விஷயத்தில் மாற்றிக் கொள்வார்கள்.அதுதான் காதல் என்ற மந்திரம்.இதை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.என்றாலும் இங்கு காதல் வந்த ஒரு பெண்ணை எப்படி அடயாலம் காண்பது என பார்க்கலாம்.

அந்த காலத்தில் தான் காதலுக்கு ஆயுதம் கடிதம்,தற்போது மலிவான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந் செய்திகள்(SMS).

இதோ அடயாலம் கண்டு கொள்ள் சில வழிகள்

1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே  நிலைத்திருக்கும்.

2)
சமீப காலமாக உங்கள் மகள்/தங்கை ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் அவள் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

3)
ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான்

4)
சும்மா தமிழ் பத்திரிகை  மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

5)
காதில் , நிச்சயமாக  செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "என்னடி சொல்லு" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...

6)
தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு  பேசுவாள்,அப்படி  பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா )

7)
முன்பேல்லாம் இரவு பத்து . மணிக்கே படுக்கைக்கு சென்றவள் ,இப்போது விடிய விடிய படிக்கிறாளா,இல்லை எல்லாரும் துங்கினா பிறகு ஒரு Miss Call கொடுப்பாள்,அதன் பின் Call வரும்.பெற்றோர்களே இடைக்கிட கொஞ்சம் வந்து கவனியுங்கள் ...........

8) கூடுதலாக கையில்  2,3 சிம் கார்டு இர்க்கும் (அது தான் இப்ப ரொம்ப மலிவா கிடைக்கிதே)

8)
எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு திரிஷா(எதோ ஒரு பெயர்), அப்புறம் பாதிமா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

9)
அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவு எஙகே போகிறது?

10)
அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள்(மன்னிப்பாயா). அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

11)
எந்த நேரமும்   கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. அப்படி என்னதான் பார்க்கிராங்களோ எனக்கு தெரியாது.

12)
பொடியங்களுக்கு  சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

13) "
வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ இனிமையாக இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.

14)
வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்

15) பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் முன்பு எப்போது இல்லாதவாறு அடிக்கடி வகுப்புகளுக்கு போகிறாளா(Special Class).அதுவும் அம்மா நான் படிக்கிறதுக்காக Library க்கு(ஆச்சிரமம்) போகிறேன் என்று சொல்லி போகிறாளா ..அப்படியென்றால் SomeThing Wrong

இப்படி எத்தனையோ விடயங்கள்,ஆமா இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும் என்று பார்க்காதிர்கள்.மேலுல்ல விடயங்கள் யாவும் தமிழ் சினிமா,நண்பர்களின் நடவடிக்கைகளிரிந்து எடுக்கப்பட்டது...

மேலுல்ல சில விடயங்கள் ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்

நன்றி

shi-live