Showing posts with label vettaikkaran. Show all posts
Showing posts with label vettaikkaran. Show all posts

Sunday, October 4

வேட்டைக்காரன் - விமர்சனம்!!

வேட்டைக்காரன் - விமர்சனம்!!*
*வே*ட்டைக்காரன்… எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் பெயரில் வெளிவர இருக்கும்
தற்கால எம்.ஜி.ஆர், அடுத்த தளபதி விஜய் ‘நடிப்பில்’ வெளிவர இருக்கும் அதிரடி
திரைப்படம். [image:
0077]<http://www.envazhi.com/wp-content/uploads/2009/07/0077.jpg>
படம்தான் இன்னும் வெளி வரவில்லையே, அதற்குள் எப்படி விமர்சனம் வந்துள்ளது என
குழம்ப வேண்டாம். படத்தின் இயக்குனர் என் நண்பனின் நண்பர் அல்ல. அதனால் அவரிடம்
மட்டும் இந்தப் படத்தை நேற்று திரையிட்டுக் காட்டியுள்ளார் இயக்குனர்.
நானும் அப்படியே ஆர்வமிகுதியில் ஒட்டிக்கொண்டு படத்தை பார்த்துவிட்டேன்.
என்னுடன் அப்படியே ஒரு இருநூறு பேர் பார்த்தனர். அவர்களுடன் ஒரு இரண்டாயிரம்
பேர் பார்த்தனர். இது மக்களுக்கு படத்தின் மீதுள்ள ஆர்வத்தையே காட்டியது.
வழக்கமாய் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கெட்டப் போட்டு மேக்கப்பிலும்,
நடிப்பிலும் வித்தியாசம் காட்டும் விஜய் இந்தப்படத்தில் தனது இயல்பான முகத்தில்
நான்கு நாள் மீசை தாடியுடன் நடித்துள்ளார். ‘மதுர’ திரைப்படத்தில் கர்சீப்பை
காலிலும், ‘போக்கிரி’யில் கையிலும் கட்டி கெட்டப் மாற்றி நடித்திருந்த விஜய்
இந்தப் படத்தில் கர்சீப்பை தலையில் கட்டி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில்
தோற்றமளிக்கிறார்!
கதை என்னவென்றால், விஜய் உழைத்துதான் ‘உணவு’ உண்ண வேண்டும் என்ற கொள்கை கொண்ட
இளைஞர். ஆனால் தற்சமயம் வேலையில்லாமல் இருக்கும் காரணத்தால் ஓசியில் ‘டீ’
மட்டுமே குடித்து வாழ்கிறார்.
இதுவரையில் விஜய் படங்களில் நாம் பார்த்திராத (கேட்டிராத) அறிமுகப் பாடல்
இப்படத்தில் உண்டு. ‘டண்டனக்கு டண்டணக்கு’ என்பதற்கு பதிலாக ‘டண்டானக்கு
டண்டாணக்கு’ என மிகவும் புதிதாக இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
“நீ அடிச்சா தான் மாஸ்.. நான் கடிச்சாலே மாஸ்” போன்ற பஞ்ச் டயலாக்குகளுடன்
தொடங்கிய படம், காமடியன் சத்யனுடன் சில நகைச்சுவைகள், பின் உள்ளூர் தாதாவின்
கடையடைப்பை எதிர்த்து அவர்களை துவம்சம் பண்ணுதல், பின் ஊர்காரர்கள் இவருக்கு
ஆரத்தி எடுத்தல் என்பது போன்ற படு வித்தியாசமான காட்சிகளுடன் கதை
விர்ர்ர்ர்ர்ரென நகர்கிறது.[image:
vkn-03]<http://www.envazhi.com/wp-content/uploads/2009/07/vkn-03.jpg>
இந்நிலையில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பஸ்
ஸ்டாப்பில் அனுஷ்காவை சந்திக்கிறார் விஜய்.
அனுஷ்காவின் பாவாடை ஓரமாக கிழிந்துள்ளதைக் கண்டு அனுஷ்காவை தெருவில் வைத்தே
திட்டி தீர்க்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் இதனால் எப்படி பாதிக்கப்படுகிறது
என்பது பற்றியும், ஓபாமாவின் வீட்டு நாய்க்கு இதனால் எப்படி வயித்துப்போக்கு
ஏற்பட்டது எனவும், மிகவும் காட்டமாகவும், தீவிரமாகவும் விளக்குகிறார்.
தனது வலது கையை மார்பு வரையில் மல்லாக்க உயர்த்தி, “கிழிஞ்சாதான் பாவாட..
கிழியலேனா மானாட மயிலாட” என்று ‘அர்த்தத்துடன்’ பஞ்ச் டயலாக் பேசுகிறார்.
அனுஷ்காவை கிழிந்த பாவாடையை தைக்கும் படி திட்டிவிட்டு, பின் தன் வீட்டில் தனது
கிழிந்த ட்ரவுசரைப் பார்த்து அழுகும் காட்சியில் விஜய் பின்னியிருக்கிறார்.
அழுது கொண்டே ஸ்விட்சர்லாந்தில் ஒரு குத்துப் பாட்டு பாடுகிறார். இதற்கு
நடுவில் அனுஷ்கா பாவாடையை மாற்றியவுடன் ஒரு குத்துப் பாடல் வருகிறது. (இந்தப்
பாடலில் அனுஷ்காவின் உடைக்கு முதலில் போட்டிருந்த கிழிந்த பாவாடையே
பரவாயில்லையென ரசிகர்கள் முணுமுணுத்தது கேட்டது!).[image:
vkn-04]<http://www.envazhi.com/wp-content/uploads/2009/07/vkn-04.jpg>
இந்தக் கட்டத்தில் தான் கதையில் யாருமே எதிர்பாராத திருப்பம் வருகிறது, அதாவது
அனுஷ்காவுக்கு விஜய் மேல் காதல் பிறக்கிறது. ஆனால் விதியோ சதி செய்கிறது!!
“யாருமே பார்க்காத அந்த பாவாடை கிழிசலை நீ எப்படி பார்த்த? நீ
பார்த்துதொலைச்சது மட்டுமல்லாமல் ஊரையெல்லாம் கூட்டி என் தங்கச்சியோட மானத்தை
வாங்கிவிட்டியேடா!!” என கத்திக்கொண்டே அனுஷ்காவின் அண்ணன் திரையில் நுழையும்
சமயம் இடைவேளை வந்து விடுகிறது.
ஓரமாய் பாவாடை கிழிந்ததற்காக ஆத்திரத்தில் கத்திய விஜய், குத்துப் பாடல்களில்
பாவாடையே போடாமல் ஆடும் அனுஷ்காவை ஒன்றுமே சொல்லாதது பெண் ரசிகைகள் மத்தியில்
சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்துப் பாட்டு முடிந்தவுடன் விஜயின் முதுகில் கத்தியால் ஒரு குத்து
விழுகிறது. திரும்பிப் பார்த்தால் தன்னுடன் ஒரு காலத்தில் கபடி விளையாடிய
பஞ்சாப் அணியின் கேப்டனும், அனுஷ்காவின் அண்ணனும் நிற்கிறார்கள்.
தாங்கள் குத்தவில்லையென்றும், இயக்குனர்தான் விஜய் செய்யும் அலும்பு தாங்காமல்
குத்தச் சொன்னார் எனவும் அவர்கள் எவ்வளோ முறை கெஞ்சியும் விஜய் அவர்களை
மன்னிக்காமல் ஊரே அதிரும்படி கர்ஜிக்கிறார். பின் குத்துப்பட்ட காயம்
ஆறுவதற்குள் அனுஷ்காவை திருமணம் செய்து காட்டுவதாக சபதம் எடுக்கிறார் விஜய்.
பின்பாதி படத்தில் முதுகில் ரத்தம் சொட்டியபடியே மிகவும் சிரமப்பட்டு
நடித்திருக்கிறார். விஜய்யின் வேதனையை பொறுக்க முடியாத நண்பர் சத்யன்,
விஜய்யின் ரத்த காயத்தில் ‘M-Seal’ பூசி அடைக்க வரும் சமயத்தில், விஜய் அவரை
தடுத்து, உழைப்பின் உன்னதத்தை பற்றி, நமீதாவுடன் ஒரு ரீமிக்ஸ் பாடல்
பாடுகிறார்.
“ஏன்டா இவன் சம்பந்தமில்லாம பாடுறான்?” என்ற குழப்பத்தில் அழுதுகொண்டே சத்யன்
வெளியேரும் போது நம் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. வில்லனின்
சதியால்(??!!!) நண்பனை இழந்த ஆத்திரத்தில், தான் செய்த சபதம் கடைசி சீனில்
நினைவுக்கு வர, வெறிகொண்ட வேங்கையென எதிரிகளை ‘வேட்டையாடப்’ புறப்படுகிறார்
வேட்டைக்காரன் விஜய்.
வில்லனை வீழ்த்தினாரா?
பஞ்சாப் கேப்டன் அனுஷ்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு தலை காதல் என்ன ஆனது?
சபதத்தில் விஜய் ஜெயித்தாரா?
முதுகில் ரத்தம் நின்றதா?
சத்யன் என்ன ஆனார்?
ஆடியோ கேசட்டில் இருக்கும் இன்னும் ஒரு குத்துபாடல் எப்போது வரும்?
போன்ற பல விஷயங்களுக்கு அழகாக விடை சொல்கிறது இந்த வேட்டைக்காரன்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய விஜயின் வித்தியாசமான படங்களின் வரிசையில்,
மற்றுமொரு வைரம்தான், இந்த வேட்டைக்காரன். வேட்டைக்காரன் வெல்வான்.

vettaikkaran story

<http://2.bp.blogspot.com/_Ejh2NHasIsE/SqEH_Ua1BfI/AAAAAAAAAzk/8Y1QGS8...>
ஏ.வி.எம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் மிகவும் பிரம்மாண்டமாய்
வந்திருக்கும் படம் வேட்டைக்காரன்...

பொதுவாகவே விஜய் படங்களில் முதலில் ஒரு ஓபனிங் சாங் வரும்..ஆனால் இப்படத்தின்
முதல் காட்சியே நம் நெஞ்சை உருக்குகிறது..விஜய் பத்து வயது சிறுவனாக
வருகிறார்..அதற்காக அவர் கடினமாக உழைத்திருப்பார் என
எதிர்பார்க்கிறேன்..கண்ணில்லாத அக்கா...காலில்லாத தம்பி..ஆஸ்த்துமா நோயில்
தாய்..மரண படுக்கையில் தந்தை..வேலையில்லாமல் விஜய்..என முதல் காட்சியிலே ஒரு
குடும்பத்தின் கஷ்டங்களை நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர் பாபு சிவன்..

விஜய் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர இன்டர்வியூ போகிறார்..அங்கே இவரது திறமை
அவமதிக்கப்படிகிறது உடனே"வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய்"..என்ற பாடல்
ஒளிபரப்பாகிறது..பாடலிலே விஜய் அந்த கம்பெனியின் எம்.எடியை
தீர்த்துக்கட்டுகிறார்..

இப்படி வேலை தேடிக்கொண்டிருக்கும் விஜயின் கனவு என்னவென்றால் தமிழகத்தின்
முதல்வர் ஆவதுதான்..இதற்காக இவர் படும் கஷ்டங்கள்..படத்தில் மிகவும் அருமையாக
சொல்லப்பட்டுள்ளன..

<http://2.bp.blogspot.com/_Ejh2NHasIsE/SqEIHLd6oVI/AAAAAAAAAzs/dixCAK5...>

இடையில் அனுஷ்காவுடன் மோதல்..மோதலின் விளைவு காதல்..என தன் இளமைக்கால
வாழ்க்கையையும் என்ஜாய் பண்ணுகிறார்..அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதுடன் தன்
காதலன் முதலமைச்சராக அவர் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை..

<http://4.bp.blogspot.com/_Ejh2NHasIsE/SqEIUHVMTyI/AAAAAAAAAz0/zsjEl73...>

இக்கட்டத்தில் தமிழகத்தில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடவே ஆளுங்கட்சி
கவிழ்கிறது..இந்நேரத்தில் விஜய் கட்சி உருவாக்குகிறார்..தேர்தலில்
நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும்
கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான
நடிப்பு..அனுஷ்கா கட்சியின் விளம்பரத்தூதுவர்.

இறுதியில் தேர்தலில் வென்றும் விடுகிறார்...தமிழக முதல்வனாக விஜய்..வெள்ளை
வேஷ்டி,வெள்ளை சட்டையில்..பார்க்கவே கொடுத்து வைக்கனும் நம் கண்களுக்கு ..

படத்தில் எந்த ஒரு பாமரனும் நினைத்தால் தமிழகத்தில் முதல்வர் ஆகலாம் என்ற
உண்மையை எடுத்துக்காட்டியுள்ளனர். :-((

கிளைமேக்ஸ் காட்சியில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தமிழக
மக்களுக்கு ஒரு இருபது நிமிடம் அறிவுரை கூறுகிறார்...

படத்தின் பிற்பாதியில் தமிழகத்தின் வறுமை எப்படி குறைந்தது..விஜயின் ஆட்சி
எப்படி இருந்தது என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கார் இயக்குனர்..

படத்தில் பிண்ணனி இசையும் (விஜய் ஆண்டனி) கிளைமேக்ஸ் வசனங்களும் மிக அருமை..

வேட்டைக்காரன்:- தமிழகத்தின் பஞ்சத்தை வேட்டையாட வந்தவன்

வேட்டைக்காரன் பரபரப்பான கதை

விஜய் குடும்பத்தில் உள்ள அனைவரும் திடீரென்று மர்மமான முறையில் ஒரே நாளில்
இறந்துவிடுகின்றனர்.

வெளி நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜய் இதை கேள்விப்பட்டு அவரது காதலி
அனுஷ்கா மற்றும் நண்பர்களிடம் இதற்க்கு காரணமானவர்களை அழித்துவிட்டு வருகிறேன்
என்று சொல்லி இந்தியா வருகிறார்.

அப்போது தன் குடும்பத்தார் பன்றி காய்ச்சல் நோயால் இறந்ததை அறிந்து கோபத்துடன்
உலகத்தில் உள்ள அனைத்து பன்றிகளையும் வேட்டையாட புறப்படுகிறார்.

இடையிடையே அனுஷ்கா வுடன் ஆடி பாடுகிறார்.

*கிளைமாக்ஸ் :*
அவருக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய விமானம்
புறப்பட்டுவிடும் . சுமார் ஒரு லட்சம் பன்றிகள் முன்பு விஜய் மேடையில்
தோன்றுகிறார் இப்படி பரபரப்பான விறுவிறுப்பில் பஞ்ச் டயலாக் பேசி அனைத்து
பன்றிகளையும் கொன்று விமானத்தை பிடிக்கிறார் இளைய தலைவலி.

...(நகைச்சுவைக்காக மட்டும்)