Tuesday, May 4

தமிழ் சினிமா என் பார்வையில்...


தமிழ் சினிமா என்றால் கேலிக்கூத்து,மசாலாத்தனம்,அரைத்த  மாவையே திரும்ப திரும்ப அரைத்தல்,செண்டிமெண்ட் காட்சிகள்,தகரத்தில் அடிப்பது போன்ற இறைச்சல் இசை.(மேலே குறிப்பிட்ட எல்லாவற்றிக்கும் விதிவிலக்கும் உண்டு)   இவைதான் தமிழ் சினிமா என வரைவிலக்கணப்படுத்தலாம்.விரைவில் இவை அகராதியிலும் சேர்த்துக் கொள்ளப்படும்.

என்றாலும் நல்ல படங்கள் காலத்திற்கு காலம் வருகின்றன.எனினும் மசாலாத்தனத்தையே அதிகம் விரும்பும் ரசிகர்கள் காரணமாக அவை போதிய வரவேற்பை பெருவதில்லை.
சினிமா என்றால் ஒரு அறிமுகப்பாடல்,3 டுயட் பாடல்கள்,ஒரு குத்து பாடல் ,நாலு அல்லது ஐந்து சண்டை காட்சிகள்,கொஞ்சம் அடிவாங்கும் நகைச்சுவை,குடும்ப செண்டிமண்ட் .இவைதான் சினிமா என்றே பழக்கப்பட்டுவிட்டது.

நான் அதிக பழைய படங்கலை பார்ததில்லை அதனால் எனக்கு பழைய படங்களின் பாணி தெரியாது.எனவே (1985-1990) கால படங்களைப்பற்றியே எனது கருத்துக்கள் இவை.

மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இரு நடிகர்கள் கமல்,ரஜனி.இருவரும் 100 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர்.கமல் நடித்தார்,ரஜனி Style காட்டினார்.எனினும் நடிப்பைவிட, மக்கள் அதிகம்  Style ஐ விரும்பினர்.கமலை விட ரஜனிக்கே அதிக புகழ் கிடைத்தது.இது கூட காரனமாக இருக்கலாம் பின்நாளில் வந்த பெரும்பாலன நடிகர்கள் Style தேர்ந்தெடுத்தது.
சரி ....ரஜனி என்ற நடிகர் style என்ற  Trend தொடங்கி வைத்தார் சரி நாம் அதை ஏற்றுக் கொண்டோம்.ஆனால் இப்ப உள்ள பொடிப்பயலுகள் எல்லாம் வந்த முதல் படத்திலெயே விரலை ஆட்டுவது, ஆ,ஊ என்று கத்துவது,நாப்பது பேரை அடிப்பது(அவருக்கு ஒரு காயமும் வராது)சவால் விடுவது.கேட்டால் ACTION படமாம்.ஐய்யோ என்னால் தாங்கமுடியல்ல.என்ன கொடுமை இது.....
ஊம்...இதையும் பார்க்கும் சில முட்டாள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனாலும் காலத்திற்கு காலம் சில நல்ல படங்கலூம்,நல்ல நடிகர்கலும் வருகின்ர(னர்)து.என்றாலும் அவை நிலைப்பதில்லை ,காரனம் அவ் நடிகர்கலும் Action என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதால்.

சரி நான் வெளிப்படையாகவே விமர்சனம் பன்னுகிறேன்.இத பார்திட்டாவது திருந்துங்களே........
ஒரு சில இயக்குனர்களை தவிர மற்றைய பெரும்பாலான இயக்குனர்களின் படங்கள் ,HERO வுக்கு
அதிக முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கும்.கதாநாயகி ஒரு சில காட்சிகளில் தொன்றி,இரண்டு ,மூணு பாடல்கலுக்கு ஆடிவிட்டதோடு அவர்கள் பணி முடிந்துவிடும்.பொதுவாக பெண்கள் கவர்ச்சிப்பொருளாகவே பயன்படுத்தப்பட்டனர்.அவர்கள் நடிக்க வைக்கப்படவில்லை.நடித்த நடிகைகள் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுக்காவிட்டால் அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்தன.இது இயக்குனர்களின் தவறா? அல்லது தயாரிப்பாலர்கலின் தலையிடா?சினிமா என்று நோக்குமிடத்து ,அது ஒரு வியாபாரம் கதையை நம்பி படம் எடுப்பதை விட மசாலா,கவர்ச்சி,நகைச்சுவை போன்றவற்றை நம்பி படம் எடுப்பது அதிக லாபத்தை தந்தது.இதனால் தயரிப்பாளர்கள் நல்ல கதையை விட ,இந்தமாதிரியான படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.இது கூட தமிழ் சினிமா இப்படியானத்திற்கு காரணமாகலாம்.
என்றாலும் ஒரு சில தயாரிப்பாலர்கள் நல்ல படைப்புகளை தந்தார்கள்.

தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் பல Hero க்கள்அறிமுகமாகினர்.என்றாலும் நிலைப்பதற்கு திறமை(ஆடுதல்,சண்டை,நகைச்சுவை,நடிப்பு?) வேண்டும்.பொதுவாக சினிமாவுக்கு வருவதற்கு முக்கிய தகுதியாக அந்த நடிகர் யாராவது சினிமா சம்பந்தப்பட்ட ஒருவரின் மகனாக அல்லது உறவினராக இருத்தல் அவசியம்.இன்றைய எத்தனையோ நடிகர்கள் அப்படியே சினிமாவுக்கு வந்தார்கள்.(சிம்பு,சுர்யா,விஜய்,தனுஷ்,ஜீவா,ரமேஷ்,ரவி,கார்தி,சாந்தனு...)

இவர்களை விட நிஜமாக யாருடையும் சிபாரிசு இல்லாமல் வெற்றிகரமாக நிலைத்திருப்பவர்கள் அஜித்தும்,விக்ரமும் மட்டுமே...
நகைச்சுவையை பொறுத்தவறை பெரும்பாலும் எல்லா பட நகைச்சுவைகலும் ஒரே மாதிரியாகவே இருந்தன.சிரிப்பு என்பதைவிட எரிச்சலாகவே இருந்தன.ஆனால் சிலருக்கு அது பிடுத்திருந்தன.ஒவ்வொருவர் ரசனை ஒவ்வொருவிதம்,மற்றவர் ரசனைக்கு நாம் மதிப்பளிக்க வெண்டும் என்பதால்,நான் அதிக காரசாரமான விடயங்களை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
சரி மேலே குறிப்பிட்ட விடயங்களை ஆழமாக நோக்குவோம்.

கதாநாயகன்.
பொதுவாக நல்ல குணம் படைத்தவராக இருப்பார்.எல்லாருக்கும் உதவி செய்வார்.அநியாயத்தை தட்டி கேட்பார். ரவுடிகளின் இடத்திற்கு தனியே போய் எல்லாரையும் அடித்து விட்டு ஒரு காயமும் இல்லாமல் திரும்பி வருவார்.பின்னர் ஊர் மக்களால் போற்றப்படுவார்.தலைவனாகுவார்.தமிழ் சினிமா கதானாயன் அதிசய சக்தி,ஆற்றல்கலை படைத்தவர்.எவ்வளவு அடி வாங்கினாலும் சாக மாட்டார், எல்லாத்தையும் அடித்து நொறுக்குவார்.அப்பொது அடிக்கும் போது அவருக்கு புது பலம் வந்திருக்கு.அவ்வளவு நேரமாக கதானாயகனை பின்னி எடுத்த வில்லன்,HERO வின் ஒரு அடியிலேயே 500 M தள்ளி போய் விழுவான்..(என்ன கொடுமை இது...)
கதாநாயகி

பொதுவாக குறும்புதனம்(அரை லூசு) உள்ளவளாக இருக்கும்.பெரிய கோடிஸ்வரியாக இருப்பாள்.(பாவம் வேற ஆள் கிடைக்காம குப்பத்து பையனை காதலிப்பாள்.)ஒரு அமைச்சர்,ம்ல பொண்ணாக இருப்பாள்.இவ எங்க ஆபத்தில் சிக்கினாலும்,நம்ம ஹெரோ வந்து காப்பாத்துவார்.
அதற்கு பிறகு HERO மேல் ஒரு இது வரும்..அவர் சொல்வார் எந்த பொண்ணு ஆபத்தில சிக்கினாலும் வந்து காப்பாத்துவேன் என்று.அதன் பின் அவள் தன் காதல் ஜெயிப்பதற்காக போராடுவாள்.இதில் கொஞ்சம் காமெடி,செண்டிமெண்ட் என்று கலந்திருக்கும். அட எத்தனையோ படங்களில் காதல் ஜெயிப்பதற்காக முழுனாலும் ஒரே இடத்திலேயே இருப்பார்கள் ,மழை வந்தால் கூட ஒதுங்க மாட்டார்கள்(கண்டிப்பாக மழை வரும்), Strong  Love வாம்.......
சரி இனி கதைகளை பற்றி ஆராய்வோம்.

ஹெரோ ஒரு ஏழை,வேலையில்லாதவன்,போக்கிரி,படிக்காதவன் என்றால்.கண்டிப்பாக ஹெரொயென் ஒரு பணக்காரி.கண்டிப்பாக தேவையில்லாமல் Heroine  நிற்கும் இடத்தில் ஒரு சண்டை வரும்.ஹெரோ வின் சக்தியை பார்த்ததும் அவக்கு ல்தகா சைஆ வரும்.ஆனால் இந்த காதலை வீட்டில் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள்.இனி என்ன ஒரே சண்டைக்காட்சிகள்.எழுதவே அலுப்பா இருக்குது.அப்ப இதை பார்க்கிரவனுக்கு எப்படியிருக்கும்(உதாரணம் : திருமலை)

கிராமத்து கதை என்றால் இரு( ஊர்,குடும்ப) பகை,துரோகம்(முதல் நட்பு பின் துரோகம்),இதுதான் கதை.வெறோன்றும் பெரிதாக இல்லை.

தமிழ் சினிமாவின் நிபந்தனைகள்.

1)HERO ஒரு செம Introduction சீன் இருக்கும்.அப்படியே ஒரு அறிமுகப் பாடல்.அது பொதுவாக ஊருக்கு உபதேசம் சொல்லும் பாடலாக இருக்கும் (உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க,ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா)....

2)அறிமுக பாடலோடு ஒரு நகைக்சுவை காட்சி அல்லது ஹெரொவின் குடும்ப காட்சி,கொடுரமான வில்லனின் ஒரு கொடுரமான காட்சி)வரும்.

3)அதன் பின் Heroine  அறிமுக காட்சி அல்லது பாடல்.

4) அதன் பின் Heroine னை HERO காண்பார் ,பார்தவுடனேயே காதல் பற்றி எரியும்.கொஞ்ச நேரத்தில் அவ காணாம போயிடுவா.HERO தேடி அலைவார்.தேடிப்பிடித்து காதலை சொல்வார்.அவ ஏற்றுக்கொள்ளமாட்டாள்.ஆனால் HERO தனக்காக உயிரையும் கூட கொடுப்பான் என உனர்ந்ததும் அவளும் காதல் கொள்வாள்.



5)எங்கேயாவது ஒரு சண்டை நடக்கும்.HERO அவ்விடத்திற்கு போய் எல்லாத்தையும் அடிப்பார்.அடிவாங்கினவர்களில் ஒருத்தன் அதீ தீவிரமாய் பாதிக்கப்படுவான்.அவன் அந்த வில்லனின் நெருங்கியவனாக,தம்பியாக இருப்பான்.அவனின் நிலமையை பார்த்து வில்லன் ஆத்திரப்பட்டு எவண்டா என் தம்பியை அடித்தவன் ,அவனை உயிரோடு கொண்டுவாங்கடா
என தன் அடியாட்களை அனுப்புவான்.கொஞ்சம் நேரத்தில் அவர்கள் எல்லோரும் Hospital இல் இருப்பார்கள்.இயலாமல் வில்லன் ,HEROவின் காதலி அல்லது குடும்பத்தினரை கடத்துவான்.பின் HERO சரணடைந்து அடிவங்கி பின் எல்லாத்தையும் அடித்து வெற்றிகரமாக திரும்பி வருவான்.
இப்படி எத்தனையோ விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

6)நகைச்சுவை

பொதுவாக அக்க்காலம் தொட்டே நகைச்சுவை என்றால் ஒருத்தர் மனதை புண்படுத்தல்,அடிவாங்குதல்,ஏமாற்றுதல் போன்ற கருத்துக்களை கொண்டே நகைச்சுவகள் அமைத்திருந்தன.ஆனால் நஒரு சில நடிகர்கள் மூடநம்பிக்கை,மடமை,படிப்பு,சமூக சீர்திருத்தம் போன்ற விடயங்கள் மூலம் ஒரு சில ஆழமான கருத்துள்ள நகைச்சுவைகளை தந்தனர்.பாரட்டுக்குரியது.பொதுவாக நகைச்சுவையாலர்கள் HEROவின் நண்பனாக அல்லது மாமாவாகவே இருப்பார்.

இருந்தாலும் மேலே கூறிய எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகல் உண்டு.எத்தனையோ நல்ல் நடிகர்கள்,நடிகைகள் உள்ளனர்(நன்றாக நடிக்கக்கூடியவர்கள்)நல்ல இடயக்குனர்கள் உள்ளனர்.அவர்கள் அதிகமாக படங்கள் பண்ணுவதில்லை.காலத்திற்கு காலம் நல்ல சில இயக்குனர்கள் அறிமுகமாகின்றனர்.

மொத்ததில் தமிழ் சினிமா தன் நிலைவுக்கு இன்னும் தன்னை நன்றாக திருத்திக்கொள்ளவேண்டும்..

இசையைப்பற்றி நான் இதில் அதிகம் எழுதவில்லை.விரைவில் இன்னொரு பதிவில் அதை பற்றி எழுதுகிறேன்.
இவ்வளவு நேரமும் பொறுமையாக வாசித்த உங்களுக்கு என் நன்றிகள்.

குறிப்பு : இந்த பதிவில் எழுத்து பிழை,இலக்கண பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.தயவு செய்து அத்தகைய தவறுகளை பின்னுட்டவும்(Comment).
இவ்வளவு எழுதியிருக்கிறேன் ஒரு பின்னுட்டல் (comment)
கூட இடாவிட்டால் நியாயமா.
நன்றி.
-Shi-Live_

11 comments:

  1. hey dude.. patta.. well said
    ~azard~

    ReplyDelete
  2. எவளவு சொன்னாலும் இந்த மடயங்களுக்கு புரிய போரதில்லடா !!!!!!!!!!

    ReplyDelete
  3. அட ஒனக்கில்லாத பின்னூட்டலா ? allah alwys wth us buddy,cry on,,,,,,,,

    ReplyDelete
  4. சிபான் சரியா சொன்ன ...

    ReplyDelete
  5. Latest news

    விஜய் படங்களிலேயே இதுவரை காணாத படுதோல்வியைச் சந்தித்துள்ளது சுறா. படம் வெளியான நான்காவது நாளே திரையரங்குகள் வெறிச்சோட, விநியோகஸ்தர்கள் கை பிசைய ஆரம்பித்துவிட்டனர்.

    Source Thatstamil.in

    ReplyDelete
  6. பல திரையரங்குகளில் இந்த வாரத்தோடு சுறாவை தூக்கிவிட்டு வேறுபடம் திரையிடும் முடிவைச் சொல்ல, 'கொஞ்சம் பொறுங்கள்.. சிங்கம் படத்தைத் தருகிறோம்' என்று கூறியுள்ளது சன் பிக்சர்ஸ்.

    திட்டமிட்டதற்கு ஒரு வாரம் முன்பாக அதாவது மே 28-ம் தேதியே சிங்கத்தை ரிலீஸ் செய்வதன் பின்னணி இதுதான் என்கிறது விநியோகஸ்தர் தரப்பு. அதே நேரம், 'சிங்கம் படத்தை ரிலீஸ் செய்வது ஓகே... ஆனால் இன்னும் ஒரு வாரம் முன்கூட்டி ரிலீஸ் பண்ணால், எங்கள் நஷ்டத்தின் அளவாவது குறையுமே!' என்று அங்கலாய்க்கிறார்கள்.

    ஆனால் விஜய்யோ, இந்த உண்மை எதையும் கவனத்தில் கொள்ளாமல், 'விமர்சனம் பத்திக் கவலையில்ல... என் படம் பிரமாதமா போகிறதாக்கும்' என்று ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்!

    ReplyDelete
  7. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete