Wednesday, September 2

இணைய தளத்தில் மாணவர்கள் செய்யக்கூடியது; செய்யக்கூடாதது என்ன

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்ற பழமொழியின் அர்த்தம், எந்தவொரு காரியத்தையும் பிஞ்சு மனதில் விதைத்தால் பலன் கிடைக்கும் என்பது தான். தமிழக போலீசார், இந்த சூத்திரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.இணைய தள பயன்பாட்டால் பெருகி வரும் "சைபர் கிரைம்' குற்றங்களைத் தடுக்க, பள்ளி மாணவர்கள் மனதில் இணைய தளத்தில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கூறும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த, சென்னை மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக சென்னையில் மூன்றாயிரம் பள்ளி மாணவர்களுக்கு, இணைய தள பயன்பாடு குறித்த விழிப்புணர்வு தகவல் சென்றடைந்துள்ளது.

பள்ளி குழந்தைகள் செய்யக்கூடியது; செய்யக் கூடாதது என்பது குறித்து "சைபர் கிரைம்' போலீசார் வழங்கி வரும் அறிவுரைகள்:

* பெற்றோரின் அனுமதியின்றி தனது தனிப்பட்ட தகவல்களான வீட்டின் முகவரி, போட்டோ, மொபைல் போன் எண், பெற்றோர் அலுவலக முகவரி மற்றும் போன் எண், பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது.

* முறையற்ற தகவல்கள் ஏதேனும் இணைய தளத்தில் தெரிய வரும் போது, பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

* இணைய தளத்தில் "சாட்டிங்' சந்திப்பில் பழக்கம் ஏற்பட்டு, அந்த நபரை நேரில் சந்திப் பதற்கு முன், பெற்றோரின் அனுமதி பெற்று, சந்திக்கும் நபரின் விவரங்களைத் தெரிந்து கொண்ட பின், பொது இடங்களில் சந்திக்கலாம்.

* இணைய தள முகவரிக்கு முறையற்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றால், அதற்கான பொறுப்பை நான் ஏற்க முடியாது என்ற விவரத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உதவியுடன், இணைய தள சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

* இணைய தளத்தில் நீங்கள் செல்லும் பகுதிகள், அதில் எவ்வளவு மணி நேரம் செலவு செய்கிறீர்கள், எந்த நாள் என்பதை பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோர் அனுமதியின்றி வேறு பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.

* இணைய தள ரகசிய குறியீட்டு எண்ணை (பாஸ்வேர்டு), பெற்றோர் இன்றி நெருங்கிய நண்பரிடம் கூட தெரிவிக்க வேண்டாம்.

* எவரையும் புண்படுத்துவதோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ இல்லாமல் சிறந்த இணைய தளத்தை பயன்படுத்துவது நல்லது.

* ஆபாச படம், பணம் வைத்து விளையாடுவது (கேம்பிளிங்), அருவருக்கத்தக்க பேச்சு, போதைப் பொருள் மற்றும் குடிபோதை தளங்களில் இருந்து பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற, சிறந்த மென்பொருள் (சாப்ட்வேர்) தடுப்பான் களை பயன்படுத்த வேண்டும்.

* இணைய தளத்தில் குழந்தைகள் பயன்படுத்திய பகுதிகளை, பல மணி நேரத்திற்கு பிறகு குழந்தைகள் பார்த்த அதே தளங்களை பெற்றோர் பார்க்கக்கூடிய வகையிலான "சாப்ட்வேர்' பயன்படுத்த வேண்டும்.

* இணைய தளத்தில் ஆபாச படங்களைத் தடுக்கும் வகையில், சைபர் பெட்ரோல், நெட்கானி, சைபர் சில்டர், வெப்வென்ஸ், சர்ப்வான், N2H2BESS ஆகிய நவீன சாப்ட்வேர்களைப் பயன்படுத்த, பெற்றோர் முன்வர வேண்டும்.

* குழந்தைகள் கம்ப்யூட்டர் வழி குற்றங்களில் ஈடுபடுவது பெற்றோர் கவனத்திற்கு தெரிய வந்தால், உடனடியாக காவல் துறையினர் உதவியை அணுக வேண்டும்

No comments:

Post a Comment