Sunday, October 4

vettaikkaran story

<http://2.bp.blogspot.com/_Ejh2NHasIsE/SqEH_Ua1BfI/AAAAAAAAAzk/8Y1QGS8...>
ஏ.வி.எம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் மிகவும் பிரம்மாண்டமாய்
வந்திருக்கும் படம் வேட்டைக்காரன்...

பொதுவாகவே விஜய் படங்களில் முதலில் ஒரு ஓபனிங் சாங் வரும்..ஆனால் இப்படத்தின்
முதல் காட்சியே நம் நெஞ்சை உருக்குகிறது..விஜய் பத்து வயது சிறுவனாக
வருகிறார்..அதற்காக அவர் கடினமாக உழைத்திருப்பார் என
எதிர்பார்க்கிறேன்..கண்ணில்லாத அக்கா...காலில்லாத தம்பி..ஆஸ்த்துமா நோயில்
தாய்..மரண படுக்கையில் தந்தை..வேலையில்லாமல் விஜய்..என முதல் காட்சியிலே ஒரு
குடும்பத்தின் கஷ்டங்களை நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர் பாபு சிவன்..

விஜய் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர இன்டர்வியூ போகிறார்..அங்கே இவரது திறமை
அவமதிக்கப்படிகிறது உடனே"வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய்"..என்ற பாடல்
ஒளிபரப்பாகிறது..பாடலிலே விஜய் அந்த கம்பெனியின் எம்.எடியை
தீர்த்துக்கட்டுகிறார்..

இப்படி வேலை தேடிக்கொண்டிருக்கும் விஜயின் கனவு என்னவென்றால் தமிழகத்தின்
முதல்வர் ஆவதுதான்..இதற்காக இவர் படும் கஷ்டங்கள்..படத்தில் மிகவும் அருமையாக
சொல்லப்பட்டுள்ளன..

<http://2.bp.blogspot.com/_Ejh2NHasIsE/SqEIHLd6oVI/AAAAAAAAAzs/dixCAK5...>

இடையில் அனுஷ்காவுடன் மோதல்..மோதலின் விளைவு காதல்..என தன் இளமைக்கால
வாழ்க்கையையும் என்ஜாய் பண்ணுகிறார்..அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதுடன் தன்
காதலன் முதலமைச்சராக அவர் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை..

<http://4.bp.blogspot.com/_Ejh2NHasIsE/SqEIUHVMTyI/AAAAAAAAAz0/zsjEl73...>

இக்கட்டத்தில் தமிழகத்தில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடவே ஆளுங்கட்சி
கவிழ்கிறது..இந்நேரத்தில் விஜய் கட்சி உருவாக்குகிறார்..தேர்தலில்
நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும்
கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான
நடிப்பு..அனுஷ்கா கட்சியின் விளம்பரத்தூதுவர்.

இறுதியில் தேர்தலில் வென்றும் விடுகிறார்...தமிழக முதல்வனாக விஜய்..வெள்ளை
வேஷ்டி,வெள்ளை சட்டையில்..பார்க்கவே கொடுத்து வைக்கனும் நம் கண்களுக்கு ..

படத்தில் எந்த ஒரு பாமரனும் நினைத்தால் தமிழகத்தில் முதல்வர் ஆகலாம் என்ற
உண்மையை எடுத்துக்காட்டியுள்ளனர். :-((

கிளைமேக்ஸ் காட்சியில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தமிழக
மக்களுக்கு ஒரு இருபது நிமிடம் அறிவுரை கூறுகிறார்...

படத்தின் பிற்பாதியில் தமிழகத்தின் வறுமை எப்படி குறைந்தது..விஜயின் ஆட்சி
எப்படி இருந்தது என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கார் இயக்குனர்..

படத்தில் பிண்ணனி இசையும் (விஜய் ஆண்டனி) கிளைமேக்ஸ் வசனங்களும் மிக அருமை..

வேட்டைக்காரன்:- தமிழகத்தின் பஞ்சத்தை வேட்டையாட வந்தவன்

No comments:

Post a Comment